செய்துங்கநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கல்வியே எதிர்காலம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு கிளை தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்துல் காதர் துவக்கிவைத்தார். இதில் பள்ளி செல்வோம் 2019 என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கல்வியே எதிர்காலம் என்ற முழக்கத்துடன் வீதி வழியாக பேரணி நடந்தது. குழந்தைகளுக்கு கட்டாயம் கல்வி பயில வழியுறுத்தி பதாகை ஏந்தி , மாணவர்கள் தெருக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜாவித், மஸ்ரப், பைசல், கெம்தாத், சுகைல், பாஸித், சித்திக், வஸீம், நௌஸாத், யாசர், அப்துல்லா உள்பட சிறுவர்கள் கலந்துகொண்டனர்.