கருங்குளம் வெங்கிடாசலபதி கோயில் கோயில் தென்திருப்பதிகளுள் ஒன்றாகும். இந்த கோயிலில் புரட்டாசி சனிகிழமையையொட்டி கருடசேவை நடந்தது. அதிகாலை நடை திறக்கப்பட்டது. பின் வெங்கிடாசலபதி க்கு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. மதியம் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
இரவு 11 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கருட வாகனத்தில் உற்சவர் ஸ்ரீனிவாசர் கிரி வலம் வந்தார். பக்தர்கள் கோவிந்தா, கோபலா என கோஷமிட்டபடி அவர் பின்னால் சுற்றி வந்தனர். இந்த நிகழச்சியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நயினார் நாகேந்திரன், ஸ்ரீவைகுண்டம் ஸ்தலத்தார் வெங்கடாச்சாரி, கருங்குளம் ஸ்ரீபாத தலைவர் சங்கர், பாலாஜி, கட்டளை தாரர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.