தேசிய கல்விக்கொள்கை 2019 ஐ திரும்ப பெறவும், அரசு பள்ளிகளை மூடுவதை நிறுத்தவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடந்தது. இதற்கான பேரணி செய்துங்கநல்லூரில் துவங்கியது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருங்குளம் வட்டார தலைவர் எபனேசர் தலைமை வகித்தார் செயலாளர் லூயிஸ் பூபாலராயன் முன்னிலை வகித்தார்.
இந்த பேரணியை மாநில பொருளாளர் ஜோதிபாபு துவக்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதன்பின்னர் ஆசிரியர்கள் பைக் மற்றும் வேன்களில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேரணியாக சென்றனர்.
இந்த பேரணி செய்துங்கநல்லூரில் துவங்கி ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், முத்தையாபுரம், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், குறுக்குச்சாலை, விளாத்திக்குளம் வழியாக கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த பேரணி துவக்க விழாவில் கருங்குளம் ஒன்றிய பொருளாளர் சக்தி, துணைதலைவர் வேலாயுதம் , ஆசிரியர்கள் ஜெபா, சீமோன்செல்வின், சந்திரசேகர், சண்முகத்தாய், வில்சன், கண்ணகி,ஜெயலட்சுமி உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.