செய்துங்கநல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. புனித லூசியா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து கிளம்பிய பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ரமணிபாய் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி பேரணியை துவக்கி வைத்தார். ஆசிரியர் ஸ்டாலின் வரவேற்றார். ஆசிரியர் மைக்கேல், ஜாஸ்மின், காவலர்கள் முத்துகனி மகராசி உள்பட பலர் கலந்துகொண்டனர். செய்துங்கநல்லூர் முக்கிய விதி வழியாக சென்ற இந்த பேரணி மீண்டும் பள்ளி வளாகத்தினை அடைந்தது. இந்த பேரணியில் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து கோஷம் எழுப்பபட்டது. செய்துங்கநல்லூர் புனித லூசியா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.