செய்துங்கநல்லூரில் பழைய பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி ஊற்றப்பட்டது. செய்துங்கநல்லூரில் உள்ள அல் மஜ்தின் நூர் பழைய பள்ளிவாசலில் வைத்து புனித ரமலான் நோன்பு கஞ்சி தினசரி ஊற்றப்பட்டு வருகிறது. இதில் சுமார் 200 அனைத்து சமுதாய மக்களுக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி வாசல் தலைவர் சாதிக் , செயலாளர் வாகப், பொருளாளர் அப்துல் கனி, துணை செயலாளர் கரீம் பாஷா, துணை தலைவர் வாசிம் அப்துல் காதர், ஜபார் அப்துல் சமது, செய்யது இப்பராகீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.