செய்துங்கநல்லூரில் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ச.ம.க. கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
கருங்குளம் தெற்கு ஒன்றிய சமக தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். அவை தலைவர் பெருமாள், வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜபெருமாள் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பையா, கருங்குளம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.