கருங்குளத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா நடந்தது.
கருங்குளம் நம்பிக்கையின் பாலம் பகுதி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமை வகித்தார். சமூக சேவகர் பென்சிமரகதம் முன்னிலை வகித்தார். புனித வளன் ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை ரெஜினா, ஆதிச்சநல்லூர் டி.என்.டி.ஏ துவக்கப்பள்ளி ஆசிரியை சுவிட்டி ஜான்சி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினர். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை ஜெயலெட்சுமி, சந்தனமாரி, பியூலா கிரேஸ், ஊழியர்கள் சந்திரபுஷ்பம், சுமதி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். சமூக சேவகர் பென்சி மரகதம் நன்றி கூறினர்.