வல்லநாடு திருமூல நாதர் ஆலயத்தில் ஆனி உத்திர திருவிழா நடந்தது.
வல்லநாட்டில் மிகவும் பழமையான ஆவுடையம்மாள் சமேத திருமூலநாதர் ஆலயம் உள்ளது. நவலிங்கபுரத்தில் முதல்தலமாக அழைக்கப்படும் இக்கோயிலில் ஆனி உத்திர திருவிழா நடந்தது. இதையொட்டி கோயிலில் மிகவும் அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. படப்பக்குறிச்சி கணபதி குழுவினரின் திருவாசக முற்றோருதல் நடந்தது. பாபாநாசம் திருவள்ளூவர் கலைக்கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமச்சந்திரன், முத்து கண்ணம்மாள், வல்லநாடு ஐவர் ராஜா கோவில் கமிட்டியார் எம்.எஸ் ராஜா, எம்.எஸ். சுப்பிரமணியன், எம்.வி. சுப்பிரமணியன், சக்ரபாணி கைங்கர்ய சபா கமிட்டியார் தாமோதர நாரயாயணன், கைலாச சப்பிரமணியன், கோவிந்தன், சோமு, பாரதி சங்கரலிங்கம் , குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருமூலநாதர் மகளிர் பக்தர் பேரவைக்குழுவினர் செய்திருந்தனர்.