காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
சமத்துவபுரம் கருணா இல்ல மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அனவரதநல்லூர் சமத்துவபுரம் கருணா இல்லத்தில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அய்யனார் குளம் பட்டி ஊர் பிரமுகர் சுடலை மணி தலைமை வகித்தார். இல்லத்தின் வார்டன் தினகரன் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட அய்யனார் குளம் பட்டி காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தினை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அய்யனார் குளம் பட்டி பத்திரகாளியம்மன் கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தனர். அதன் பின் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


