
செய்துங்கநல்லூர் எம்.எம். நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீலதா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பாலசுந்தரி காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். குழந்தைகளுக்கு அரசு வழிகாட்டுதல் பேரில் ஓவியப்போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் ஜேம்ஸ் சேவியர் ராஜ், பிலிப், சௌந்தர லெட்சுமி, ஜுடின், அங்களா ஈஸ்வரி பூர்ண லதா, சுஜா, ஐயம்மாள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.