செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் பிற துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையப் புள்ளி விவர ஆய்வாளர் இரா பேச்சியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டச் செயலர் இரா .மாரிச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கருங்குளம் ஒன்றியத்தினை சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் இளம் தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுய தொழில் கடன் திட்டக் கையேடு வழங்கப்பட்டது. சுய தொழில் குறித்த ஆலோசனைகள் மற்றும் விவரங்களும் வழங்கப்பட்டது. தொழில் முனைவோர் திவ்யா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்துசெய்திருந்தது.


