செய்துங்கநல்லூரில் சர்ப்ப காவடி எடுத்த பக்தர்
பூஜை அறையில் தானே வந்து அமர்ந்த நாகபாம்பு
பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம்
செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவை சேர்ந்தவர் உச்சிமகாளி (55). இவர் முருக பக்தர். கடந்த 35 வருடங்களாக பாத யாத்திரையாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் காவடி கூடம் என்னும் இடத்தில் முருகப் பெருமானை வைத்து வணங்கி வருகிறார். இதற்கிடையில் நேற்று மதியம் 3.50 மணிக்கு நாக பாம்பு ஒன்று காவடி முன் வந்து நின்றுபடமெடுத்து ஆடியது. அதன் பின் அவர் முருகப்பெருமானை நினைத்து வணங்கி நின்றார். அப்போது சர்பம் காவடியில் வைத்திருந்த கண்ணாடி பெட்டிக்குள் வரவழைத்தார். இதை கேள்வி பட்டவுடன் அக்கம் பக்கத்தில் உள்ள வர் கள் ஆவலோடு வந்து சர்ப்ப காவடியை தரிசனம் செய்தனர். இன்று தை பூசம் என்பதால் முருகன் எனது காவடியில் இறங்கி விட்டார் என கூறிய உச்சிமகாளி சுவாமி பக்தர்கள் படை சூழ இன்று அதிகாலை செய்துங்கநல்லூரில் இருந்து சர்ப்ப காவடியுடன் கிளம்பி திருச்செந்தூருக்கு சென்றார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பல்வேறு காவடிகளும், வேல் குத்தி செல்பவர்களையும், பறவை காவடி எடுத்து செல்வர்களையும் காண முடிகிறது. ஆனால் சர்ப்ப காவடி எடுத்து செல்வது ஆபூர்வம். அதுவும் செய்துங்கநல்லூரில் தானே வந்து அமர்ந்து நாகத்தினை முருகபக்தர் எடுத்து சென்றது இப்பகுதியில் பரவசத்தினை ஏற்படுத்தியது. உச்சிமகாளி சுவாமி, தெற்குகாரசேரி, கன்னியாகுமரி, செய்துங்கநல்லூர் உள்பட பல இடங்களில் இருந்து சர்ப்ப காவடி எடுத்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
&&&
&&


