செய்துங்கநல்லூர், சேரகுளம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 கைது. செய்துங்கநல்லூர் போலிசார் நடவடிக்கை. சேரகுளம், செய்துங்கநல்லூர் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜா சுந்தர் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் தனிபிரிவு உதவி ஆய்வாளர் ஜெகநாதன், ஏரல் காவல் நிலைய தலைமை காவலர் குணசேகரன், குரும்பூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் வெங்கடாச்சல பெருமாள், செய்துங்கநல்லூர் முதல் நிலைக் காவலர்கள் வேம்புராஜ், ஆனந்தராஜ், ஏரல் காவல் நிலைய காவலர் நாராயணசாமி மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய காவலர் பட்டவராயன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து மேற்படி கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா வெள்ளூர் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கி மகன் இசக்கிமுத்து(19), வெள்ளூர் மேலத்தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கந்தசாமி என்ற கண்ணன் (22) ஆகிய 2 பேரையும் தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், சேரகுளம், செய்துங்கநல்லூர் மற்றும் சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் 2 செல்போன்கள் மற்றும் 6 இரு சக்கர வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 2 செல்போன்கள் மற்றும் 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.


