தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பள்ளிவாசலில் வைத்து தவ்கீத் ஜமாத் சார்பில் மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள் நடந்தது.
இதில் மாவட்டச் செயலாளர் அசாரூதின் வரலாறு படைப்போம் இளைஞர்களே என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். அரசு துறையில் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் சுலைமான் உரையாற்றினார். இலக்கை நோக்கி வா இளைஞனே என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி பேசினார். காலத்தை சரியாக பயன்படுத்துவோம் என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் சாகுல் இறுதி உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


