வல்லநாடு அருகே செக்காரக்குடியில் குளம் உடைந்து வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர். 70 பேர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் வல்லநாடு அருகே செக்காரக்குடியில் பெரியகுளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இந்நிலையில் இன்று காலை செக்காரக்குடி பெரிய குளத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் இருந்த வயல்களுக்குள் புகுந்து பின்னர் செக்காரகுடி ஊரில் உள்ள சுமார் 20 வீடுகளுக்குள்ளும் புகுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் கருங்குளம் சேர்மன் கோமதிராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த 20 குடும்பத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோரை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


