செய்துங்கநல்லூர் அருகே வழிப்பறி குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த செய்துங்கநல்லூர்போலிசாருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் பராட்டி பராட்டு பத்திரம் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் கடந்த 26 ந்தேதி சதீஷ் என்பவரிடம் தங்கஜெயின் மற்றும் செல்போனை வழிபறி கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கி பறித்தனர். இதுகுறித்து சதீஷ் செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரிடம் புகார் கொடுத்தார். அவர் தன்னுடன் தலைமை காவலர்கள் கள் சுடலை கண்ணு, சற்குணம், செல்வகுமார் மற்றொரு சுடலைகண்ணு ஆகியோருடன் வல்லநாட்டில் பதுங்கி இருந்த முத்து சாமி என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்பு கொண்டவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வழிப்பறி குற்றவாளியை கைது செய்து நகையை மீட்ட போலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், தலைமை காவலர்கள் சுடலை கண்ணு, சற்குணம், செல்வகுமார் மற்றொரு சுடலைகண்ணு ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டு பத்திரத்தினை அளித்தார். அவருடன் ஏ.டி.எஸ்.பி கோபி( மதுவிலக்கு) குமார் ( நிர்வாகம்) ஆகியோர் உடனிருந்தனர்.


