செய்துங்கநல்லூர் சந்தையில் முக கவசம் அணியாதவர்களுக்கு சுகாதர துறையினர் அபராதம் விதித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நடந்த சந்தையில் பலர் முக கவசம் அணியாமல் பொருள்களை விற்பனை செய்து வந்தனர். மேலும் பொருள்கள் வாங்க வரும் வாடிககையாளர்களும் முக கவசம் அணியாமல் அலட்சியமாக கூடினர். எனவே அவர்கள் மீது சுகாதர துறையினர் நடவடிக்கை எடுத்தனர். 15 பேருக்கு தலா 200 வீதம் அபராதம் விதித்து முககவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நடவடிக்கையில் கருங்குளம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி, சுகாதர ஆய்வாளர் சண்முக பெருமாள் , செய்துங்கநல்லூர் காவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


