
செய்துங்கநல்லூர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வரவேற்பளித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆழ்வார்திருநகரி ஒன்றிய தலைவர் முத்துக்குட்டிக்கு வசவப்பநேரி கிராமத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது, இந்த திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த பிஜேபி கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ,ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள், கருங்குளம் சத்திரம் பகுதியில் வைத்து வரவேற்பளித்தனர்.
இந்த நிகழ்வில் திருநெல்வேலி மாவட்டம் பார்வையாளர் பாலாஜி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கேசவன், வடக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நங்கமுத்து, உடன்குடி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், செல்வின், கேபிள் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.