செய்துங்கநல்லூர் எஸ்.என்.பட்டியில்உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் பழமையானது. இந்த கோயில் திருப்பணி செய்து 100 வருடங்கள் கழித்து 2017 ஆகஸ்ட் 31 ந்தேதி நடந்தது. நேற்று இந்த கோயிலில் வருசாபிசேகம் நடந்தது. இ¬யட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு யாகம், பூர்ணா ஹீதி , தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து கும்பம் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் மகா கும்பாபிசேகம் நடந்தது. மக்கள் கோவிந்தா,கோபாலா என கோஷமிட்டபடி வரதராஜ பெருமாளை வணங்கி நின்றனர். அதன் பின் மகா அபிசேகம் நடந்தது. தொடர்ந்து தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெகடர் ராஜசுந்தர், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், விவசாய சங்க தலைவர் குமார், பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன், சமூக சேவகர் சுடலை, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை எஸ்.என்.பட்டி ஊர் பொதுமக்கள் மிகச்சிறப்பாக செய்தனர்.


