கருங்குளம் அருகே திறந்த வெளியில் பள்ளிகூடம் நடைபெறுகிறது. கட்டிடம் கட்டும் பணி எப்போது துவங்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் அருகே கிளாக்குளத்தில் இந்து ஜெயலட்சுமி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 65 மாணவ மாணவிகள் படித்து வருகிறனர். இங்கு 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளி கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது என மும்பை தங்க ராஜ் மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்தார். இதனால் இந்த பள்ளி கட்டிடத்தில் யாரும் இருக்க கூடாது, அதை கட்டும் வரை வேறிடத்தில் வைத்து பாடம் நடத்த அறிவுருத்தப்பட்டது.
இதற்கிடையில் பள்ளியை நடத்த இயலாது என நிர்வாகம் அரசுவிடம் ஒப்படைத்தாகவும் கூறப்படுகிறது. இந் நிலையில் தற்போது மாணவர்கள் அருகில் உள்ள வெங்கிடலாசபதி கோயில் வளாகத்தில் வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். மரத்தடியில் வைத்து பாடம் நடத்துவதால் பாதுகாப்பு இன்றி குழந்தைகள் தவித்து வருகின்றனர். வண்டு கடிப்பது உள்பட பல இன்னல்களுக்குள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளாகிறார்கள்.
இதுகுறித்து இங்குள்ள மாணவ மாணவிகள் கூறும் போது எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. அடிக்கிற காற்றில் நாங்கள் படிக்கும் புத்தகம் பறக்கிறது. பள்ளிகட்டிடத்துக்குள் எங்களால் நுழைய பயமாக இருக்கிறது. இதற்கிடையில் அடுத்த மாதம் கோயில் திருவிழா நடைபெறும். அந்த சமயத்தில் இந்த ஆலயத்தில் நாங்கள் கல்வி பயில இயலாது. எனவே எங்களுக்கு புதிய கட்டிடம் உடனடியாக கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மாணவ மாணவிகள் இன்னல் தீர அரசு கிளாக்குளம் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.