ஆதிச்சநல்லூரில் பரம்பில் சுற்றுபுறச்சுகூர் அமைக்கும் பணி மிக மந்தமாக நடைபெறுகிறது. இதானால் அகழாய்வு ஆர்வலர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இது தான் மிகப்பெரிய பழமையான இடுகாடு. இந்த இடுகாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட ஈமத்தாழிகள் சுமார் 3000 வருடம் பழமையானது என புளோரிடா ஆய்வகம் உறுதிசெய்துள்ளது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் 2 கோடி ரூபாயில் 114 ஏக்கர் நிலத்தினையும் சுற்றி இரும்பு வேலி அமைக்கும் பணி சுமார் 2 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. தற்போது அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இது குறித்து கால்வாய் கிராமத்தினை சேர்ந்த பொன்ரவி கூறும் போது ஆதிச்சநல்லூரை பாதுகாக்க தொல்லியல் துறையினர் மிகச்சிறப்பாக செயல் பட்டு, தற்போது சுற்று புற வேலி அமைக்க பணம் ஓதுக்கீடு செய்தனர். இந்த பணி 50 சதவீதம் வேலை முடிந்த அளவில் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி நடந்து வருகிறது என மதுரை ஐகோர்டில் மத்திய மாநில அரசு தெரிவித்த நிலையில் கடந்த 2 மாத காலமாக இந்த பணி கிடப்பில் கிடக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
மதுரை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்து, அதில் இந்தியாவில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி என்றும், இந்தியாவின் தொன்மையான நாகரீகம் ஆதிச்சநல்லூர் நாகரீகம் எனவும் தகவல் அறிந்த நிலையில் தற்போது நடைபெறும் வேலையை நிறுத்தி இருப்பது அகழாய்வு ஆர்வலர்கள் மத்தியில் வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக தடை பட்ட வேலையை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.