தாமிரபரணியை சுத்தப்படுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணியை சுத்தப்படுத்திய வகைக்கு விருதுபெற்ற தற்போதைய தூத்துக்குடி கலெக்டர் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி நெல்லை தூத்துக்குடி மாவடத்தின் நீர் ஆதாரம். இந்த நதி மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு அணைககட்டு நான்கு கால்வாய் வழியாக சுமார் 48 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தூத்துககுடி பைப்லைன், விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி குடிநீர், கருங்குளம் கூட்டு குடிதண்ணீர் திட்டம், மூலைக்கரைப்பட்டி குடிதண்ணீர் திட்டம், சாத்தான்குளம் உடன் குடி கூட்டு குடிதண்ணீர் திட்டம், நெல்லை மாவட்டம் கூடன்குளம் கூட்டு குடிதண்ணீர் திட்டம், நாசரேத், ஆத்தூர் உள்பட ஆற்று வழியோர குடியிருப்பு குடிநீர்திட்டம் பல உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணைகட்டில் இருந்து வடகால் வழியாகவும், தனி பைப்லைன் வழியாகவும் தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த ஆற்றில் இருகரைகளிலும் மணல் கரைகள் பெரும்பாலான இடங்களில் உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே மணல்கரை இல்லை. எனவே தாமிரபரணியை தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக மேம்படுத்தி விடலாம். அதுபோலவே வல்லநாடு, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்பட பல இடங்களில் வனத்துறை மூலமாக மரம் வளர்க்கப்பட்டு தாமிரபரணியை பாதுகாத்து வருகிறார்கள். இதுபோல தூத்துககுடி மாவட்ட தாமிரபரணி கரையில் மரங்களை நட்டு நதியை மேம்படுத்தலாம். தாமிரபரணியை பேணி பாதுகாக்கும் விதமாக தாமிரபரணி கரையை மேம்படுத்தி, அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வருகின்றன சாக்கடைகளை ஆற்றில் கலக்காமல் நடவடிக்கை எடுத்தால் நதி சுத்தமாகி விடும்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் காந்திமதி நாதன் கூறும்போது, தாமிரபரணிதான் இரு மாவட்டத்துக்கும் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரம். இந்த நீர் மாசு படுகிறது. வருங்காலங்களில் தாமிரபரணி இப்பகுதி மக்களின் உயிர் நீர் . எனவே நதியை காப்பாற்றுவது மிக அவசியமாகிறது. எனவே தூத்துககுடி மாவட்டத்தில் மிக குறைந்த தூரத்தில் நதி ஓடுகிறது. கலியாவூரில் இருந்து முக்காணி வரை, மறுகரையில் சென்னல்பட்டியில் இருந்து ஆத்தூர் வரை கரைகளை செம்மைபடுத்தி நதியை மேம்படுத்திவிடலாம். இதில் பல கிலோ மீட்டரில் கரைகள் உள்ளன. குறிப்பாக சென்னல்பட்டி, மணக்கரை, கொங்கராயகுறிச்சி, பொன்னன் குறிச்சி , ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, கேமலாபாத், ஏரல் , மங்கல குறிச்சி போன்ற இடங்களில் கரை உள்ளது . இந்த கரையை மேம்படுத்தி, அவசியமான இடத்தில் படித்துறை கட்டி, கிராமங்களில் இருந்து ஆற்றுக்குள் செல்லும் சாக்கடையை வடிகட்டி சுத்தமான நீரை நதியில் விட்டால், நதி காப்பாற்றப்படும். இங்கு வளரும் மீன்கள் உள்பட உயிர்கள் உயிர்பெறும் . மணல் கடத்தல் தடுக்கப்படும். முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தினை சீர் செய்து, அதன் பிறகு நெல்லை மாவட்டத்தில் இந்த பணிகளை செய்யலாம். எனவே இதற்கான பணியை அரசு துவங்க வேண்டும். என்று அவர் கூறினார்.
தாமிரபரணி எங்கும் அடர்ந்து காணப்படும், செடிகளை அகற்றி தாமிபரணியை சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிககை விடுத்துள்ளனர்.
பாகஸ் போடலாம்
தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்த கிலோ மீட்டர் தூரமே உள்ளது. மேலும் அகலமும் குறைவாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியில் நெல்லையில் இருக்கும் போதே தாமிரபரணியை பாதுகாக்க பல ஏற்பாடுகள் செய்தார். இதற்காக அவார்டு பெற்றுள்ளார். அவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணியை சீர்செய்வது மிக சுலபம். தற்போது இந்தபணியை துவங்கினால் கூட மழை வருவதற்குள் சிறப்பாக முடித்து விடலாம். இந்த பணியை தனியார் உதவியோடு மாவட்ட ஆட்சியர் வேகமாக முடிக்கலாம். அதற்கு பல தொழிலதிபர்கள்,தொண்டு நிறுவனங்கள், தயாராக உள்ளனர். எனவே இதற்கான நடவடிக்கையில் உடனே மாவட்ட ஆட்சிதலைவர் இறங்குவார் என சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்.