கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் பயிற்சியை நடத்தினார். பயிற்சியில் வீடியோ மூலமாக திறன் வளர்ப்பு குறித்தும், மாணவர்கள் எதிர்கால திட்டங்கள் குறித்தும், அதிக மதிப்பெண் பெறுவது சம்பந்தமாக பயிற்சி நடந்தது. கல்லூரி பேராசிரியர்கள் கண்ணன், ஜான்பால், ஜோசப் சங்கீத மலரவன், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.