கருங்குளம் வெங்கிடாசலபதி கோயிலில் பவித்ரோத்சவம் நடந்தது. இதையட்டி மாலை 5 மணிக்கு புஷ்ப அங்கி சேவை, திருப்பவித்ரோத்சவம் துவக்க நிகழ்ச்சிகள், அங்குரார்ப்பண், மிருத்ஸங்கரணம் , ஆவாகனம், ரட்சாபந்தனம் ஆகியவை நடந்தது. இரண்டாம் நாள் சயனதி வாசம், நிரந்தர உறுப்பினர் குடும்ப சங்கல்பம் , திருமஞ்சனம், திருப்வித்ர மாலைப் பிரதிஷ்டையும், தொடர்ந்து பகவானக்கு திருப்பவித்ர மாலை சமர்பணமும் சாந்தி ஹோமங்கள், பூர்ணா ஹீதி கோஷ்டி நடந்தது. மூன்றாம் நாள் திருமஞ்சனம் ஹோமம் பூர்ணா ஹீதி, கோஷ்டி ஹோமம், சகஸ்ர நாம அர்ச்சனை ,கோஷ்டி நடந்தது.
நான்காம் நாள் திருமஞ்சனம், ஹோமங்கள் பூரத்தி மகா பூர்ணாஹீதி, கோஷ்டி, உற்சவர் ஊஞ்சல், புறப்பாடு, உற்சவர் ஆஸ்தானம் சேர்தல் மந்திராசதை சமர்பித்தல் , பிரசாத விநியோகம் ஆகியவை நடந்தது. ஸ்ரீவைகுண்டம் தலத்தார் வெங்கடாச்சர்ரி, நடராஜன், கிருஷ்ணன் பொன்னு வெங்கடடேசன் என்ற சின்ன கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராஜேஷ் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
தொடர்பானவை
October 4, 2024