வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் மூழகி வாலிபர் பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகில் உள்ள சிங்கி குளம் முருகன் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகநயினார். இவரது சகோதரி சிவனம்மாள் வல்ல நாட்டில் தவறி விட்டார். இவரை அடக்கம் செய்ய உறவினர்கள் சிங்கிகுளத்தில் இருந்து வல்லநாடு வந்தனர். இதில் ஆறுமுகநயினார் மகன் முத்துமாரி( வயது 38) உடன் வந்தார். தாமிரபரணி ஆற்றங்கரை முறப்பநாட்டில் சிவனம்மாள் உடலை அடக்கம் செய்து விட்டு உறவினர்கள் ஆற்றில் குளித்தனர். அப்போது முத்துமாரியும் குளித்துள்ளார். அதன் பிறகு வீடு வந்து பார்த்த போது முத்து மாரியை காணவில்லை. ஆற்றுக்கு வந்து தேடி பார்த்த போது அவரது மோட்டார் பைக் மட்டும் தனியாக நின்றது . அவர் மாமியாரை அடக்கம் செய்யும் போது குடிபோதையில் இருந்துள்ளார். ஒரு வேளை ஆற்றில் முழ்கி இறந்திருக்க வேண்டும் என உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் ஆற்றுக்குள் இறங்கி தேடி பார்த்தனர். எந்த தகவலுக்கும் கிடைக்கவில்லை. முறப்பநாடு போலிசுக்கு தகவல் கொடுத்தனர். முறப்பநாடு போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ்நாரயணன் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தார். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படை வீரர்கள் வந்து ஆற்றில தேடி பார்த்த போது முத்துமாரி உடல் கிடைத்தது.
அவர் உடலை பாளை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முறப்பநாடுபோலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன முத்துமாரிக்கு கனகா என்ற மனைவியும் முத்து அஷ்வின்(12) ஆறுமுக தரன்(2) என்ற இரு குழந்தைகள் உள்ளன. இந்த சம்பவம் வல்லநாடு பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.