செய்துங்கநல்லூரில் சிவன் கோயிலில் ஆடிபூரத்திருவிழா நடந்தது.
தென்சிதம்பரம் என போற்றப்படும் செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான கோயில் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆடிப்பூரத்திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. சிவனுக்கும் அம்மாளுக்கும் சிறப்பு அபிசேகம் அலங்காரம் மிகச்சிறப்பாக நடந்தது. மாலை 6 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. பொதுமக்கள் சார்பில் பிள்ளையார் கோயிலில் இருந்து சீர் வரிசை பொருள்கள் எடுத்து வரப்பட்டது. பின் சிறுமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து மூலவர் சிவகாமி அம்மனுக்கு வளைகாப்பு நடந்தப்பட்டது. அதன்பின் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு வளைகாப்பு நடத்தப்பட்டு, தீபராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆன்மிகபக்தர் பேரரவை செய்திருந்தது.