ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பொதுமக்களுக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் வருகின்ற 31.07.2019 அன்று முற்பகல் 10 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வைத்து சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெறுகிறது. இதற்கு தூத்துக்குடி சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.