செய்துங்கநல்லூர் அருகில் உள்ள எஸ்.என்.பட்டி வடகரையான் பேச்சியம்மாள் கோயில் கொடைவிழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் குடியழைப்பு நடந்தது. அதன் பின் வடகரையான், பேச்சியம்மாள் மற்றும் பரிவாரதேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மறு நாள் காலை தீபராதனை நடந்தது. மதியக் கொடையில் சுவாமிகளுக்கு உச்சிகால பூஜை நடந்தது. அதில் சுவாமிக்கு கணியான் கைவெட்டு உள்பட விசேஷ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இரவு சாமக்கொடை நடந்தது. இதற்காக வடகரையான் பேச்சியம்மாளுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி வேட்டைக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி பொதுமக்களுக்கு அருள் கூருதல் நிகழ்ச்சி நடந்தது. மறு நாள் காலை படைப்பு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து கொடைவிழா முடிவிற்றது. இதற்கான ஏற்பாடுகளை எஸ்.என்.பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


