செய்துங்கநல்லூர் அருகே உள்ள வல்ல குளம் முனியச் சுவாமி கோயில் கொடைவிழா நடந்தது.
செய்துங்கநல்லூர் அருகே வல்ல குளத்தில் அருள் பாலிக்கும் முனிய சுவாமி கோயில் திருவிழா நடந்தது . இதையொட்டி குடியழப்பு நடந்து. வல்ல குளம் கிராமத்திலிருந்து சுவாமியை அழைத்து கோயிலுக்குக் கொண்டு வந்தனர். பின் சுவாமிக்கு அலங்காரம் நடந்தது. பின் நடுச்சாம பூஜை நடந்தது. தொடர்ந்து கோயில் சுவாமியாடிகள் வேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி , பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5 மணிக்குப் படப்பு எடுக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. சேரகுளம் சப் இன்ஸ்பெக்டர் அல்லி ராஜன் கௌரவிக்கப்பட்டார். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் தங்க பெருமாள் தலைமையில் கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


