இரட்டைத்திருப்பதியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இரட்டைத்திருப்பதியில் சீனிவாசன் சேவைகள் மற்றும் அறக்கட்டளை அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அலுவலர்கள் அனைவரும் இணைந்து அலுவலக வாசலில் பானையில் பொங்கலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், சீனிவாசன் சேவை அறக்கட்டளையின் கலை இயக்குனர் விஜயகுமார், சுவாமிநாதன், முருகன், கசங்காத்தபெருமாள் மற்றும் சீனிவாசன் சேவை அறக்கட்டளை ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சீனிவாசன் சேவைகள் மற்றும் அறக்கட்டளை அலுவலர்கள் செய்திருந்தனர்.


