செய்துங்கநல்லூர் புனித லூசியா ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் நான்காவது தேசிய சித்தர் தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் வருகிற புதன்கிழமை 30 ந்தேதி நடைபெறுகிறது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ செல்வி தலைமை வகிக்கிறார். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், காவல் ஆய்வாளர் ராஜ சுந்தர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எழுத்தளார் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆர்.சி.பங்குதந்தை ஜாக்சன், பள்ளி தலைமையாசிரியை ரமணிபாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழச்சியில் உணவு கண்காட்சி மூலிகை கண்காட்சி, சித்த மருத்துவ விளக்கப்படங்கள், மூலிகை தேநீர் நிலவேம்பு குடிநீர் கபசுரக்குடிநீர்போன்ற குடிநீர்கள் வழங்கப்படுகிறது. கொரனா வைரஸ் தொற்றில் சித்த மருத்துவத்தின் தீர்வு ஆயுள் வளர்க்கும் சித்த மருத்துவம் போன்ற தலைப்புகளில் கருதரங்கம் இடம்பெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
&&&&


