ஸ்ரீவைகுண்டத்தில் இந்து மகா சபா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்து மகா சபா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஐயப்பன், மாநில துணைத்தலைவர் புருஷோத்தமன், நெல்லை மண்டல தலைவர் சுடலைகண், மாவட்டத்தலைவர் சங்கர் ராஜா, வெள்ளூர் துரை உள்பட நெல்லை, தூத்தக்குடி மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏராளமானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.