கருங்குளம் ஒன்றியத்தினை அதிமுக கைப்பற்றியது. ஒன்றிய சேர்மனாக கோமதியும், துணை சேர்மன் லெட்சுமணபெருமாளும் வெற்றி பெற்றனர்.
கருங்குளம் ஒன்றியத்தில் சேர்மன் மற்றும் துணை சேர்மன் மறை முக தேர்தல் நடந்தது. செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலத்தில் உள்ள கூட்ட அரங்கில் இந்த தேர்தல் நடந்தது.
கருங்குளம் ஒன்றியத்தில் 1 வது வார்டு சண்முகம்( புதியதமிழகம்) 2 வது வார்டு லெட்சுமண பெருமாள் (அதிமுக) 3 வது வார்டு மணிகண்டன்( அமமுக) 4 வதுவார்டு அண்ணாமலை( அதிமுக) 5 வது வார்டு முத்துராமலிங்கம் (அதிமுக),6 வது வார்டு ராதா(திமுக), 7 வது வார்டு கோமதி( அதிமுக) 8 வது வார்டு வசந்தி ( திமுக). 9 வது வார்டு மைமூன் (திமுக) 10 வது வார்டு சுடலை முத்து (அதிமுக) 11 வது வார்டு பொன்ராணி (அதிமுக) 12 வது வார்டு சுந்தரி ( திமுக) 13 வது வார்டு சுப்புலெட்சுமி (அமமுக) 14 வது வார்டு மாடத்தி ( அமமுக) 15 வது வார்டு அன்னலெட்சுமி ( அதிமுக) 16 வது வார்டு கம்மாடிச்சி( திமுக) ஆகியோர் வாக்களிக்க வந்தனர்.
அதிமுக சார்பில் 7 வது வார்டு கவுன்சிலர் கோமதியும், திமுக சார்பில் 16 வது வார்டு கவுன்சிலர் கம்மாடிச்சியும் போட்டியிட்டனர். இதில் கோமதி11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக கம்மாடிச்சிக்கு 5 வாக்குகள் கிடைத்தது. அதன் பின் சேர்மன் கோமதி பதவியேற்றுக்கொண்டார்.
மாலை 3 மணிக்கு துணை சேர்மன் தேர்தல் நடந்தது. இதில் 2 வது வார்டு கவுன்சிலர் லெட்சுமணபெருமாள் அதிமுக சார்பிலும், 12 வது வார்டு உறுப்பினர் சுந்தரி திமுக சார்பிலும் போட்டியிட்டனர். இதில் 4 வது வார்டு கவுன்சிலர் அண்ணாமலை பங்கேற்க வில்லை. லெட்சுமணபெருமாள் 10 வாக்குகளும், சுந்தரி 5 வாக்குகளும் பெற்றனர். துணைசேர்மனாக லெட்சுமண பெருமாள் பதவியேற்றுகொண்டார்.
இந்த தேர்தலை தேர்தல் அதிகாரி சசிரேகா , உதவி தேர்தல் நடந்தும் அதிகாரிகள் தாசில்தார் லெனின், வேளாண்மை அலுவலர் சசிகலா, ஒன்றிய ஆணையாளர் சுப்பு லெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டிபன் ரத்ன குமார், லெட்சுமணன், சுல்தான் ஆகியோர் நடத்தினர்.
சேர்மன் பதவியேற்பை யொட்டி செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலத்தில் போலீஸ் டி.எஸ்.பி சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் பலத்த பாதுகாவல் போடப்பட்டிருந்தது.