தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி என இரு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று துவங்கி 16ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் முதல் கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில்
இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூரில் உள்ளது. இந்த கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 31 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 155 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதே போல்
கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொறுத்தவரை மாவட்ட வார்டு 2 மாவட்ட கவுன்சிலர் பதவியும், 16 பஞ்சாயத்து யூனியன் வார்டு கவுன்சிலர் பதவியும், 31 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியும், 249 வார்டு உறுப்பினர் பதவியும் உள்ளது.
கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தை பொறுத்தவரை தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்காக வேட்புமனுவை பெற 2 அலுவலர்களும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக வேட்புமனுவை பெற 3 அலுவலர்களும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக வேட்புமனுவை பெற 6 அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வார்டு உறுப்பினர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்பவர்களிடம் வேட்புமனுவை பெற அந்தந்த பஞ்சாயத்துகளில் தனியாக ஒரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாணல்காடு பஞ்சாயத்திற்கு தலைவர் பதவிக்கு ஒருவரும், விட்டிலாபுரம் கோவில்பத்து பஞ்சாயத்திற்கு தலைவர் பதவிக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் வார்டு உறுப்பினர் பதவிக்கு கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பஞ்சாயத்துக்களில் இன்று 19 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.


