
004. கடிதங்களை ஓவியமாய் அனுப்பும் ஓவியர் நெல்லை வள்ளி
ஓவியர் வள்ளி நாயகம் மிகவும் திறமையானவர். பாளை மேட்டுதிடல் முஸ்லீம் பள்ளி ஓவிய ஆசிரியர். மிகப்பெரிய ஆளுமைகளோடு பயணித்தவர். மிகப்பெரிய எழுத்தாளர்களின் நூலுக்கு அட்டை படம் வரைந்து கொடுப்பவர். நெல்லையில் உள்ள முக்கிய எழுத்தாளர்களுக்குஅவரது நூல்களுக்கு ஓவியம், பல முக்கிய இடங்களில் இவரது ஓவியம் என நெல்லையில் மறைக்க முடியாத மிகப்பெரிய சொத்து ஓவியர் வள்ளி நாயகம். தி.க.சிஅவர்களோடு கடைசி வரை பயணித்தவர். எனக்கு நல்ல நண்பர் என்பதோடு, நல்லவழி காட்டி. நான் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகும் முன்பே எனக்குப் பதிப்பு செம்மல் என்ற விருதைத் தந்து அந்த இலக்கை நோக்கி பயணம் செய்ய வைத்தவர். நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றால் அவர்களுடைய சுவரில் திறக்குறளை எழுதி வைத்து மகிழுவார். எனது நூலகத்தில் கூட அவரது திருக்குறள் தற்போதும் உள்ளது. எனது நூலுக்கு ஓவியம் வரைய வந்தவர், மூன்று நாள் கழித்து அழகான கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தினை தான் நீங்கள் பார்க்கீறீர்கள். தற்போது பல்வேறு வலைத்தளங்கள் மூலம் பயணிக்கும் பிரபலங்கள் மத்தியில் கடிதம் போடுவது என்பது ஒரு கலை. அதுவும் என்னைப் பாராட்டியதோடு, என்னோடு பயணிக்கும் இளவல்களையும் பாராட்டியிருக்கிறார். தி.க.சி அவர்களின் சிஷ்யர் அல்லவா? வாழத்துகள் நண்பரே. தொடரட்டும் உங்கள் பணி. அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு