
செய்துங்கநல்லூர் அருகே உள்ள வீ கோவில்பத்து கிராமத்தில் ஒரே வீட்டில் அண்ணன் தம்பி இருவருக்கு எலும்புருக்கி நோய் கடந்த பதினைந்து வருட காலமாக நோயால் அவதியுற்று வந்தனர், இதை அறிந்த திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் நலத்திட்டங்கள் வழங்கினார்.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் திருமலைநம்பி நாச்சியார் தம்பதியினருக்கு சின்னதுரை 35 முருகன் 30 என்ற இரு மகன்களும் முத்துலட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர், இதில் சின்னத்துரை, முருகன், இரு மகன்களும் கடந்த பதினைந்து வருட காலமாக எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டு வருகின்றனர், மகள் முத்துலட்சுமி திருமணமாகி கணவனைப் பிரிந்து 5 வயது மகனுடன் தந்தை வீட்டில் தான் வாழ்ந்துவருகிறார், இதை அறிந்த திமுக மாநில இளைஞர் அணிதுணை செயலாளர் ஜோயல் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு ஒரு தையல் மெஷின் மற்றும் உதவி தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கினார். பின்பு செய்துங்கநல்லூர் இல் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், பின்பு கட்சி நிர்வாகிகளுடன் கடந்த வருடம் கலந்துரையாடல் நடத்தினார் இந்நிகழ்வில் திமுகவினர் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தனர்,
இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் மகாராஜன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நல்லமுத்து, திமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் குமார், ஊராட்சி செயலாளர் தோனி அலிபேக், கோவில்பத்து ஊராட்சி செயலாளர் முருகன், தாடி மாரியப்பன், தோனி அப்துல்காதர், சுப்பையா, கண்ணன், பட்டிஇசக்கி, ஒன்றிய துணைச் செயலாளர் தாமஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.