கயத்தார் அருகே குளத்து மணல் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். டிராக்டர் மற்றும் 1 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பால் தலைமையிலான காவல்துறை இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, நாகலாபுரம் பகுதியில் உள்ள ஊர் பொது குளத்தில், சட்டவிரோதமாக டிராக்டரில் குளத்து மண் திருடியதாக நாகலாபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் மகன் கருப்பசாமி (31), நாகலாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி கிருஷ்ணமூர்த்தி மகன் வெயிலுமுத்து (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டிராக்டர் மற்றும் ஒரு யூனிட் குளத்து மணல் பறிமுதல் செய்யப்பட்டது.


