திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பிரம்ம சக்தி அம்மன்கோயில் கொடைவிழா நடந்தது.
இதை யட்டி 9 ந்தேதி காலை 6 மணிக்கு மேல் சிறப்புப் பூஜைகள் நடந்தது. மதியம் 12 மணிக்குச் சிறப்புத் தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு சங்கு முகம் தீர்த்தம் எடுக்கச் செல்லுதல் மாலை 6 மணிக்குப் புனித தீர்த்தம் எடுத்து வந்து கும்பம் ஏற்றுதல் மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு மாக்காப்பு அலங்கார பூஜை நடந்தது.
10 ந்தேதி காலை 4 மணிக்குக் கணபதி ஹோமம், சக்தி ஹோமம், காலை 7 மணிக்குச் சிறப்புத் தீபாராதனை கருங்குளம் ஆற்றில் கரகம் தீச்சட்டி எடுத்து வருதல் 12 மணிக்குச் சிறப்புத் தீபாராதனை நடந்தது மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 4 மணிக்குப் பொங்கல் இடுதல், 6 மணிக்குக் கனி வகைகள் பூஜை, மாலை 7 மணிக்கு மாவிளக்கு மாலை 7.30 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 10 மணிக்கு அலங்கார பூஜை, இரவு 12 மணிக்கு உச்சி கால பூஜை இரவு 1 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோவில் அறக்கட்டளை செய்திருந்தது.