தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலூகா முத்தாலங்குறிச்சி கள்ளவாண்டசுவாமிகள் கோயில் கொடைவிழா நடந்தது. கடந்த சனிக்கிழமை குடியழப்புடன் கொடைவிழா துவங்கியது. ஞாயிற்றுக்கிழமை சங்கு முகத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கும்பம் ஏற்றப்பட்டது. அதன் பின் மதியக்கொடைவிழா நடந்தது. இரவு ஊர் சுற்றி வருதல் ,நேர்த்திக் கடன் செலுத்துதல் உள்படச் சுவாமி தரிசனம் நடந்தது. செவ்வாய்க் கிழமை இரவு கள்ளவாண்டசுவாமிக்கு கோயில் கொடைவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு ஹோமம் வளர்த்து கும்பம் ஏற்பட்டது. பின் அலங்கார பூஜை நடந்தது. இரவு வேட்டைக்குச் செல்லுதல் வேட்டை பானை போடுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இவ்விழாவில் செய்துங்கநல்லூர் ஆய்வாளர் ராஜ சுந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ஊர் பொதுமக்கள் சார்பாக அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


