முத்தாலங்குறிச்சி வடக்கூர் வள்ளி தெய்வானை சமேதசுப்பரமணிய சுவாமி கோயில் கும்பாபிசேகம் வருகிற 1 ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இந்த் கோயில் திருப்பணி செய்யப்பட்டு, புதிய சிலைகள் பிரதிட்சை செய்யப்பட வுள்ளது. அதன் பின் வருகிற 1 ந்தேதி காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் மீன லக்கனத்தில் கன்னிவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தேவதைகள் கோயிலில் கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது. இந்த கோயில் விழா நிகழ்ச்சிகளை தர்மகர்த்தா முருகன், சொர்ணத்த்£ம்மாள் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் மாடன் குடும்ப வகையறா, சுந்தரம் குடும்ப வவகையறா, ஆவுடையப்பன் குடும்ப வகையறா, பிச்சக்காரன் குடும்ப வகையறா உள்பட பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.


