அடையக்கருங்குளம் கல்சுண்டுக்காலனி அம்பேத்கார் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர் மூலம் பொதுமக்களிடையே, அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை மீட்டெடுக்க விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. அதோடு குளம், கால்வாய், ஆறு போன்ற நீர்நிலைகளைப் பேணவும், குறிப்பாக தாமிரபரணி நதியை சுத்தமாக வைத்திருக்கவும், நீர்நிலைகளில் ஏற்படும் உயிர்பலிகளை தடுக்க மாணவர்கள் மூலம் பொது மக்களிடையே துண்டு பிரச்சா நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்கள் மேற்கொள்ளப்பட்டது.தெருக்களிலுள்ள வீடுகளில், குருவிக் கூடுகளை மாணவர்கள் கட்டினர். மேற்கொண்ட விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் காந்திமதி கஸ்தூரிபாய் தலைமை வகித் தார்.ஆசிரியை பேபிகிறிஸ்டி
ராணி வரவேற்றார். சமூக ஆர்வலர்பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.ஆசிரியை எப்ஸி ராஜஷீலா நன்றி கூறினார். குருவிக்கூடுகள் எப்படி செய்வது மற்றும் இந்நிகழ் சியினை சமூக ஆர்வலர் கிரிக்கெட்மூர்த்தி ஒங்கிணைத்து செய்திருந்தார்.


