தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தலின்போது வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இது போல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் ஆய்வாளர் ஜெரால்டுவின், தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணிய பெருமாள், உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


