இது தொடர்பாக தாமிரபரணி மகா புஷ்கர பெருவிழா கமிட்டி, தூத்துக்குடி தாம்ரபர்ணீஸ்வரம் டிரஸ்ட் சார்பில் அதன் தலைவர் விவேகம் ரமேஷ், செயலாளர் பிஎஸ்கே மாரியப்பன், பொருளாளர் இளங்குமரன் மன்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு விபரம்: பாரத தேசத்தில் உள்ள 12 மகா நதிகளில் ஒன்றான தாமிரபரணி மகாபுஷ்கர பெருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, சப்தரிஷி தீர்த்தத்தில் குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயரும்போது விருச்சிக ராசிக்கு உரிய இடமான அந்த திருத்தலத்தில் வரும் அக்டோபர் 11ம் தேதி வியாழக்கிழமை முதல் 24ம் தேதி புதன்கிழமை வரை மகா புஷ்பகர பெருவிழாவை கமிட்டி நடத்த உள்ளது. இந்த 14 நாட்களும், புனித நீராடல், ஹோம பூஜைகள், நதி ஆரத்தி, பக்தி சொற்பொழிவு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்க்பபட்டுள்ளது.
மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 141 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய இந்நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை சீரமைத்தல், மின் வசதி, சிறப்பு பேருந்துகள், ஆம்புலன்ஸ் சேவை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தீயணைப்பு வாகனம், உடை மாற்றும் அறைகள் போன்ற வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கவும், விழா நடத்தவும் அனுமதியும் அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


