வாங்கல் திருவேங்கடாச்சாரி கிருஷ்ணமாச்சாரி அல்லது வி. டி. கிருஷ்ணமாச்சாரி (8 பிப்ரவரி 1881 – 14 பிப்ரவரி 1964), சட்டப் படிப்பு மற்றும் இந்தியக் குடியியல் பணிகள் முடித்த இவர், பரோடா இராச்சியத்தின் பிரதம அமைச்சராக 1927 முதல் 1944 வரையிலும்[1], பின்னர் ஜெய்பூர் இராச்சியத்தின் பிரதம அமைச்சராக 1946 முதல் 1949 முடிய பனியாற்றியவர். மேலும் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர்.பின்னர் 1961 முதல் 1964 முடிய இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர்.
தற்கால கரூர் மாவட்டத்தின், வாங்கல் கிராமத்தில் 8 பிப்ரவரி 1881ல் பிறந்த தி. கிருஷ்ணமாச்சாரி, பள்ளிப் படிப்பை வாங்கல் கிராமத்திலும், கல்லூரி மற்றும் பட்டப்படிப்பை முறையே, மாநிலக் கல்லூரி, சென்னை, சென்னை சட்டக் கல்லூரியிலும் முடித்தவர்


