ஆறாம்பண்ணையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஆறாம்பண்ணை பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் வாக்காளர் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. ஒன்றிய அலுவலர் ஹெலன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலளர் ஹரிஹரசுந்தரம் முன்னிலை வகித்தார். வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதை சரிபாக்கும் பணி நடந்தது. ஏராளமான வாக்காளர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது புகைப்படம், விலாசம் மற்றும் பெயர்களை சரிபார்த்தனர்.


