தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் வருகிற 18ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18.05.2018 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணி முதல் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 40% மற்றும் அதற்கு மேற்பட்ட சதவீதமுள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் வேலையில் இல்லாத மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் பிற திட்டங்கள் மூலம் உதவித்தொகை பெறாத தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை கொண்டு வந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இச்சிறப்பு முகாம் மாதாந்தோறும் கோட்ட அளவில் சுழற்சி முறையில் ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும்.