தூத்துக்குடி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தூத்துக்குடி நகர நிலவரித்திட்ட (அலகு 1) தனி வட்டாட்சியர் சந்திரன் பணியிட மாற்றம் செய்ப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ் பயஸ் ஓட்டப்பிடாராம் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓட்டப்பிடாராம் தனி வட்டாட்சியர் ஞானராஜ் சாத்தான்குளம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி கிழக்கு கடற்சாலை (அலகு 1) தனி வட்டாட்சியராக எஸ்.சேதுராமன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு கடற்சாலை (அலகு 1) தனி வட்டாட்சியராக இருந்த காளிராஜ் தூத்துக்குடி நகர நிலவரித்திட்டம் (அலகு 1) தனி வட்டாட்சியராக இடமாற்றம் செய்ப்பட்டுள்ளார். மருத்துவ விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பிய பி.செல்லப்பாண்டியன் கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலராக இருந்த முருகானந்தம், எட்டையபுரம் இருப்புப் பாதை நிலஎடுப்பு தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.