ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளத்தில் காசநோய் எதிர்ப்பு வாரவிழா நடந்தது.
கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடந்த விழாவிற்கு முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் டாக்டர் மார்கரெட் பவுலா தலைமை வகித்தார் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் அஸ்வினி ஜெனிபர் முன்னிலை வகித்தார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் வரவேற்றார்.
இரண்டு பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காசநோய்க்கு இடைக்கால நிவாரண உதவித் தொகை பெற ஸ்ரீவைகுண்டம் தாசில்தாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் ஐயம்மாள் நன்றி கூறினார்.
நம்பிக்கை மைய ஆய்வக நுட்பனர் எல்சி ராணி, சுகாதார பணியாளர் ஆறுமுகம், காசநோயாளிகள், மருந்து அளிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் கலைக்கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு வாரம் நடந்தது.
மாவட்ட காசநோய் மைய துணை இயக்குனர் டாக்டர் சுந்தரலிங்கம தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். காசநோயில்லா இந்தியா 2025 என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முனைவர் பாக்கிய லெட்சுமி, முனைவர் பேச்சிமுத்து, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தான சங்கரவேல், முதன்மை சிகிச்சை மேற்பார்வையாளர் மாரிமுத்து, ஐசிடிசி ஆற்றுனர் வேதவல்லி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஏரல் காசநோய் அலகின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம் செய்திருந்தது.