நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கார் ஒன்று சென்றது. அதை காரை ஜெபர்சன் (41) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அவரது உறவினர்கள் சாமுவேல், மிசிபில் ஆகிய மூவரும் சென்றனர். தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகே உள்ள மணத்தி அருகே வந்து கொண்டிருந்த போது ஏரலில் இருந்து தென்திருப்பேரை நோக்கி சென்ற லோடு வேன் ஒன்று திரும்பி கொண்டிருந்தது. அந்த லோடு ஆட்டோவை ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(41) ஓட்டினார். அவருடன் செல்வராஜ் என்பவரும் உடனிருந்தார்.
அப்போது இரண்டு வாகனங்களும் மணத்தி எஸ் வளைவில் வரும் போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் வந்த 3பேரும், லோடு ஆட்டோவில் வந்த 2 பேரும் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரும்பூர் காவல் ஆய்வாளர் கோகிலா படுகாயமடைந்தவர்களை மீட்டு மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


