ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் பாசனத்தில் கருகும் வாழைப்பயிர்களுக்கு தண்ணீர் திறந்து விட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
1866 ஆம் ஆண்டு பக்கிள் என்கிற ஆங்கிலேய ஆட்சியர் விவசாயிகளிடம் பணம் வசூல் செய்து ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை கட்டி வட கால்,தென் கால் பாசனம் உருவாக்கினார்.ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு விவசாயிகளின் பணத்தினால் கட்டப்பட்டதால் இது விவசாயிகளின் அணைக்கட்டாகும். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கடைசி அணையாக ஸ்ரீவைகுண்டம் அணை அமைந்துள்ளது.
இந்த அணையின் வடகால், தென்கால் பாசன வாய்க்கால்கள் மூலமாக ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரத்தில் 25 ஆயிரத்து 560 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
ஸ்ரீவைகுண்டம் அணையின் பாசனத்தை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், குடிநீரை நம்பி பல லட்சக்கணக்கான கிராம மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய பராமரிப்பு இல்லாததால் தூர்ந்து மண் மேடாகி 8 அடி ஆழத்தில் இருந்து ஒரு அடி ஆழமாக மாறி விட்டது.
சுமார் 30 லட்சம் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க கூடிய இந்த அணை தூர்ந்து மண் மேடாகி விட்டதால் ஆண்டுதோறும் பருவ மழைக் காலங்களில் ஆற்றில் வரும் குறைந்தது 15முதல் 25டி.எம்.சி மழை வெள்ள தண்ணீர் தேக்கி வைக்க வழியின்றி வீணாக கடலில் சென்று கலக்கிறது. தற்போதும் இதே நிலை தொடர்வது வேதனைக்கு உரியதாகும்.
அணையில் போதுமான அளவு தண்ணீரை தேக்கி வைத்து பயன் படுத்த முடியாத காரணத்தினால் மூன்று போக விவசாயம் ஒரு போகமாக மாறி விட்டது. கோடை காலங்களில் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவானது.
அணையை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்களை ஏமாற்றும் வகையில் 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப் பட்டது. இந்தப் பணிகளும் துரித கதியில் நடத்தப்படவில்லை. அணையின் தூர் வாரும் பணிகள் பசுமை தீர்பாயத்தின் உத்தரவுப்படி மேற்கொள்ளாத காரணத்தினால் கடந்த ஆண்டு வடகிழக்கு மழைக் காலத்திற்கு முன்பாக முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் இந்த ஆண்டும் வழக்கம் போல அணையில் தண்ணீர் தேக்க வழியின்றி சுமார் 25டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று விட்டது.